SURABOOKS

1,223 மருத்துவர்களுக்கு தாற்காலிக அரசுப் பணி: விண்ணப்பிக்க நவ.30 கடைசி

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் துறையின் கீழ் தாற்காலிக அடிப்படையில் 1,223 மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு நவம்பர் 30 கடைசியாகும்.
தமிழக அரசின் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் துறையில் உதவி அறுவைச் சிகிச்சை நிபுணர் (பொது) என்ற பதவிக்கு எம்.பி.பி.எஸ். படிப்பு முடித்த மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
நுழைவுத் தேர்வு நடத்தி, அதன் பின்பு நேர்காணலின் அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படும்.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு ஆணையத்தின்  www.mrb.tn.gov.in  என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்கு நவம்பர் 30-ஆம் தேதி கடைசியாகும். விண்ணப்பத்துக்கான கட்டணத்தை வங்கியின் மூலம் செலுத்துவதற்கு டிசம்பர் 2-ஆம் தேதி கடைசியாகும். இதற்கான நுழைவுத் தேர்வு 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22-ஆம் தேதி நடைபெறும். மேலும் விவரங்களுக்கு:
www. mrb.tn.gov.in.

SURABOOKS