SURABOOKS

பஞ்சாப் நேஷனல் வங்கியில் மேலாளர் ஆகலாம்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 53 அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

1. கம்பெனி செயலாளர்:
1 இடம் (பொது). சம்பளம்: ரூ.25,700 – 800/ 5 – 29,700 – 900/ 6 – 35,100. வயது: 1.1.2015 அன்று 21 முதல் 35க்குள். தகுதி: ஏதேனும் ஒரு பட்டத்துடன் ஏசிஎஸ் முடித்திருக்க வேண்டும் மற்றும் 2 ஆண்டுகள் முன் அனுபவம்.

2. மேலாளர் (செக்யூரிட்டி):

35 இடங்கள். (பொது – 18, ஒபிசி – 10, எஸ்சி – 5, எஸ்டி – 2). சம்பளம்: ரூ.19,400 – 700/ 1 – 20,100 – 800/ 10 – 28,100. வயது: 1.1.2015 அன்று 21 முதல் 35க்குள். தகுதி: ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் ராணுவம்/ கடற்படை/ விமானப்படையில் 5 ஆண்டுகள் அதிகாரிகள் பணியிலும் அல்லது துணை ராணுவப்படையில் அதிகாரியாக 5 ஆண்டுகள் முன் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

3. அதிகாரி (டேட்டா அனலிசிஸ்ட்):

1 இடம் (எஸ்டி). சம்பளம்: ரூ.14,500 – 600/ 7 – 18,700 – 700/ 2 – 20,100 – 800/ 7 – 25,700. வயது: 1.1.2015 தேதிப்படி 21 முதல் 28க்குள். தகுதி: புள்ளியியல்/ கணிதம் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் பட்டப்படிப்பு அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் பேங்கிங் மற்றும் நிதி பாடத்தில் முதுநிலை டிப்ளமோ அல்லது புள்ளியியல்/ கணிதம் பாடங்களில் முதுநிலை பட்டம்.

4. மெக்கானிக்கல் ஆபீசர் (தொழிற்சாலை):

3 இடங்கள் (ஒபிசி). சம்பளம்: ரூ.14,500 – 600/ 7 – 18,700 – 700/ 2 – 20,100 – 800/ 7 – 25,700. வயது: 1.1.2015 தேதிப்படி 21 முதல் 30க்குள். தகுதி: மெக்கானிக்கல் பாடத்தில் பி.இ.,/ பி.டெக். பிளஸ் 2வில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். (எஸ்சி., எஸ்டியினருக்கு 55 சதவீத மதிப்பெண்களே
போதுமானது).

5. டெக்ஸ்டைல் ஆபீசர் (தொழிற்சாலை):

1 இடம் (ஒபிசி). சம்பளம்: ரூ.14,500 – 600/ 7 – 18,700 – 700/ 2 – 20,100 – 800/ 7 – 25,700. வயது: 1.1.2015 தேதிப்படி 21 முதல் 30க்குள். தகுதி: டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ.,/ பி.டெக், பிளஸ் 2 வில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். (எஸ்சி., எஸ்டியினருக்கு 55 சதவீத மதிப்பெண்கள் போதுமானது).

6. பயர் ஆபீசர்:

9 இடங்கள் (பொது). சம்பளம்: ரூ.14,500 – 600/ 7 – 18,700 – 700/ 2 – 20,100 – 800/ 7 – 25,700. வயது: 1.1.2015 தேதிப்படி 25 முதல் 40க்குள். தகுதி: ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் நாக்பூரில் உள்ள தேசிய பயர் சர்வீஸ் கல்லூரியில் துணை அதிகாரிக்கான படிப்பை முடித்திருக்க வேண்டும் மற்றும் மாநில/ மத்திய/ பாதுகாப்புத் துறையில் தீயணைப்பு துணை அலுவலராக 3 ஆண்டுகள் முன் அனுபவம்.

7. ஆபீசர் (பிரின்டிங் டெக்னாலஜிஸ்ட்):

3 இடங்கள் (எஸ்சி). சம்பளம்: ரூ.1,500 – 600/ 7 – 18,700 – 700/ 2 – 20,100 – 800/ 7 – 25,700. வயது: 1.1.2015 தேதிப்படி 21 முதல் 30க்குள். தகுதி: 60 சதவீத தேர்ச்சியுடன் பிரின்டிங் டெக்னாலஜி பாடத்தில் பி.இ.,/ பி.டெக்., அல்லது டிப்ளமோ.

ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்:

பொது/ ஒபிசி/ முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.400. (எஸ்சி., எஸ்டி., மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50). இதை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.
www.pnbindia.in
என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைன் தேர்வு நடைபெறும் நாள்:
29.5.2015.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்:
16.4.2015.

SURABOOKS