SURABOOKS

ஏர் இந்தியா விமான போக்குவரத்து சேவைகள் நிறுவனத்தில் 402 பாதுகாப்பு முகவர் பணி

ஏர் இந்தியா விமான போக்குவரத்து சேவைகள் நிறுவனத்தின் (AIATSL) மும்பை, ஹைதராபாத், சென்னை மற்றும் கொச்சியில் காலியாக உள்ள 402 பாதுகாப்பு முகவர் பணியிடங்களை நிரகப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: Air India Air Transport Services (AIATSL)

காலியிடங்கள்: 402

பணி: Security Agent

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கிலம், இந்தி மற்றும் உள்ளூர் மொழிகளில் பேச தெரிந்திருக்க வேண்டும். கணினி துறையில் டிப்ளமோ முடித்திருந்தால் விரும்பத்தக்கது..

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. இதனை மும்பையில் மாற்றத்தக்க வகையில் Air India Air Transport Services Ltd என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

சம்பளம்: ஒப்பந்த ஊதியமாக மாதம் ரூ.13,800 வழங்கப்படும்.

மேலும் விண்ணப்பிக்கும் முறை, நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.airindia.in/writereaddata/Portal/career/181_1_SA_Advt_1_4_2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

SURABOOKS