SURABOOKS

வாங்க தொழில் தொடங்கலாம்!

வார வாரம் இந்தப் பகுதியில் பல்வேறு தொழில் யோசனைகளையும் திட்டங்கள் வடிவமைப்பது பற்றியும் பார்த்து வருகிறோம்.
தொழில் தொடங்குவது என்பது சமார்த்தியம், புத்திசாலித்தனம், விழிப்புணர்வு, கொஞ்சம் மூலதனம், புதுமையாக யோசித்தல் போன்ற காரணிகள் இருக்கும்பட்சத்தில் எளிதாக வெற்றிபெற்றுவிடலாம். தொழிலில் வெற்றி பெறுவது என்பது கம்பசூத்திரம் இல்லை. சந்தையை தொடர்ந்து கண்காணித்து வாருங்கள். தேவையும் அதே நேரத்தில் புழக்கமும் உள்ள பொருட்களை முதன் முதலாக தேர்வு செய்யுங்கள். அதற்குப் பிறகு அந்தப் பொருளின் தன்மையைப் பற்றி முழுமையாக ஆராயுங்கள். தன்மை எனப்படுவது, அந்தப் பொருள் எவ்வளவு இடத்தை அடைத்துக்கொள்ளும், பாதுகாப்பு, உறுதித் தன்மை இவற்றையெல்லாம் சேர்த்துதான் அதன் தன்மை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் எளிதில் கெட்டுப்போகாத பொருளை எடுத்து அதை உற்பத்தி செய்து, விற்பனை செய்யத் தொடங்கினால், நிச்சயம் சுயதொழிலில் சாதிக்க முடியும்.
அந்த வகையில் மக்கள் மத்தியில் தேவையையும் அதே நேரத்தில் மவுசையும் பிடித்துள்ள ஒரு பொருள்தான் டிஸ்யூ பேப்பர்.
வாழ்க்கையில் தினப்பஐ வாழ்க்கையில் நீங்கள் நடந்து செல்லும்போது, அலுவலகத்தில், கழிப்பறையில் என்று டிஸ்யூ பேப்பர் இல்லாத இடமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அதன் பயன் நம்மை தொற்றிக்கொண்டுவிட்டது. அந்தப் பொருளுக்கு மக்கள் அடிமையாகிவிட்டார்கள் என்ற அர்த்தம் இல்லை. சுகாதாரம் அதே நேரத்தில் தண்ணீர் சிக்கனம், இப்படி பல்வேறு வகைகளில் டிஸ்யூ பேப்பரை தினந்தோறும் நாம் கையாண்டு வருகிறோம்.
றுபரும்பாலனவர்களுக்கு டிஸ்யூ பேப்பர் கழிப்பறையில், ஓட்டலில் பயன்படுத்தும் ஒரு விஷயமாகவே நினைக்கிறார்கள். அப்பஐ நினைத்தால், அது முழுக்க முழுக்க உங்களது தவறு என்றுதான் சொல்வேன். திருமண வீடு, மருத்துவமனை, அழகு சாதன நிலையங்கள், கோயில்கள் என்று எல்லா இடங்களிலும் டிஸ்யூ பேப்பரின் பயன்பாடு தவிர்க்கமுடியாத ஒரு பொருளாகிவிட்டது. ஆனால், இதில் ஒவ்வொரு பகுதியிலும் பயன்படுத்தப்படும் டிஸ்யூ பேப்பரின் தன்மைகள் வித்தியாசப்படும் என்பதை நீங்கள் கூர்ந்து கவனித்தால் அதை உணர முடியும்.
உலக அளவில் 21 மில்லியன் டன் டிஸ்யூ பேப்பர் ஒர நாளைக்கு உற்பத்தி செய்யப்படுகிறது என்று ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. அதில் 6 மில்லியன் டன் டிஸ்யூ பேப்பர் ஐரோப்பிய நாட்டில் மட்டும் உற்பத்தி செய்யப்படுகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். இந்தளவிற்கு வரவேற்பும், தேவையும் உள்ள இந்தத் தொழிலை தேர்வு செய்வதன் மூலம் அதிகளவில் வருமானம் ஈட்ட முடியும்.
ஐஸ்யூ பேப்பரை பொறுத்தவரையில் மக்கள் எவரும் பிராண்ட் பார்த்து வாங்குவதில்லை என்பதால், தொழில் தொடங்க நினைப்பவர்கள் தைரியமாக இறங்கலாம்.
இதற்கு தேவைப்படும் எந்திரங்கள் மற்றும் உதிரி பாகங்கள்:
• ஸ்லிட்டர் ரிவைண்டர்
• டிஸ்யூ பேப்பர் எம்போஸிங் மெஷின்
• ஆட்டோமெட்டிக் பேப்பர் நாப்கின் மிஷின்
மூலப் பொருட்கள்:
• டிஸ்யூ பேப்பர்
• பேக்கிங் மெட்டிரியல்
இந்த உற்பத்திக்கு தேவைப்படும் மின்சாரம் (ஒரு நாள் உற்பத்திக்கு) – 10 கிலோ வாட் மின்சாரம்
இந்த உற்பத்திக்கு தண்ணீர் பெரிய அளவில் தேவை இருக்காது.
தேவைப்படும் மனித வளம்:
• மேலாளர் – ஒருவர்
• மேற்பார்வையாளர் – 2 பேர்
• முன் அனுபவம் உள்ளவர்கள் – 2 பேர்
• முன் அனுபவம் இல்லா தொழிலாளர்கள் – 5 பேர்
இந்ததொழில் தொடங்க 200 சதுர அடி இடம் போதுமானது. இந்தத் தொழில் தொடங்குவதற்கும் மூன்றிலிருந்து ஐந்து மாதங்கள் ஊழியர்களுக்கு ஊதியம் அளிப்பதற்கும் குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் கையில் இருப்பின் தைரியாக இந்தத் தொழிலை தொடங்கலாம்.
எடுத்த எடுப்பிலேயே புதிய எந்திரங்கள் வாங்கவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. இரண்டாம் தர எந்திரங்களை வாங்கி பயன்படுத்தி, அதில் தொழிலை முறையாக கற்றுக்கொண்டு வருமானம் ஈட்டும் பட்சத்தில், புதிய எந்திரங்களை வாங்கிக்கொள்ளலாம்.

SURABOOKS