SURABOOKS

தொழில் முனைவோர் – 7

நம் தாத்தா, பார்த்திருக்கிரீர்களா? வயதானலும், அவர்கள் எப்போதும் சுறுசுறுப்பாகவே இருப்பார்கள். சில நேரங்களில் படிக்கட்டு ஏறும்பொழுது நாம் மூச்சுவாங்கி நின்றாலும், நம்மை கடந்து ஒரு முதியவர் மேலே ஏறி செல்லும் அனுபவம் நம் வாழ்க்கையிலும் நடந்திருக்கும். அந்தக்கால ஆட்கள் சராசரியாக எண்பது வயது முதல் தொண்ணூறு வயது வரை வாழ்ந்திருப்பார்கள். நூறு வயதை தொட்டவர்களையும் நாம் பரவலாக பார்க்கம்.இப்போதைய நம் தலைமுறையினரின் சராசரி அறுபது வயது தான் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இளம் வயதிலேயே பல தரப்பட்ட நோய்களுக்கு ஆளாகி அல்லல்படுகின்றனர் தற்போதைய இளசுகள். அதற்கான காரணங்களை கண்டுபிடிக்க நாம் பெரிய ஆய்வுகளையெல்லாம் செய்யதேவையில்லை. அந்த காரணத்தை அனைவரும் அறிவார்கள். தற்போதைய தலைமுறையினரின் வாழும் முறையும், உணவு பழக்கவழக்கமும் தான் அதற்கான காரணங்கள். நம் உணவு கலாச்சாரங்களில் மேற்கத்திய உணவுகளின் வரத்து அதிகமாகிவிட்டது.

சின்ன குழந்தைகள் கூட பல விளம்பரங்களை பார்த்துவிட்டு நொறுக்கு தீனிகளுக்கு அடிமையாகிவிடுகின்றனர்.இல்லை, நாங்கள் தினந்தோறும் உணவுகளில் காய்கறிகள் பழங்கள் சேர்த்து கொண்டிருக்கிறோம் என்றாலும் அதிலும் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது, நாம் பயன்படுத்தும் காய்கறி, பழங்களில் 1சதவீதம் தான் இயற்கை முறையில் விளைந்தவையாம்.செயற்கை முறையில் விளைந்த காய்கறினால் நமக்கு எந்த பயனும் இல்லை. அந்த காய்கறிகளினால் நம் ஆரோக்யம் மேம்படுமா என்றால்,அது கேள்விக்குறி தான். இதற்கு கிராமப்புறங்கள் மாதிரி நமக்கு தேவையான காய்கறிளை நாமே உற்பத்தி செய்து கொள்ளலாம். இது எங்கு வேண்டுமானனால் சாத்யம். நகர புறங்களில் இட வசதி, நேரமின்மை போன்ற இடற்பாடுகள் உள்ளன என்கிறீர்களா? நிச்சயம் இல்லை. ஆர்வமும். மாடியும் போதும் உங்கள் வீட்டுக்கு தேவைக்கு மட்டுமல்ல. இதனை ஒரு தொழிலாக கூட நீங்கள் செய்யலாம். அவ்வாறான வீட்டுத்தோட்டத்தை சென்னை வளசரவாக்கத்தில் ஒரு பட்டதாரி பெண் செய்து வருகிறார், அவர் வீட்டுத்தோட்டத்தின் தேவையையும்,அதனை லாபகரமாக செய்யும் விதத்தையும் நமக்கு சொல்கிறார்.

என் பெயர் நாச்சாள். நான் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆளஉ எலக்டிரிகல் மீடியா படித்திருக்கிறேன்.சொந்தமாக தொழில் செய்து வருகிறார். எனக்கு சொந்த ஊரே சென்னை தான். நான் படித்து முடித்து விட்டு சிங்கப்பூரில் பணியாற்றி வந்தேன். நல்ல வேலை, நல்ல சம்பளம் என்றாலும் வெளிநாட்டு வாழ்க்கை என்பது ஒரு இயந்திர தனமான வாழ்க்கை தான். எனக்கு விவசாய துறையில் ஆர்வம் உண்டு. அதனால் ஊருக்கு திரும்பி நான் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயாவிடம் இயற்கை விவசாயத்தை பற்றி நிறைய விசயங்களை கற்றுகொண்டேன். மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நம் நாட்டு மக்கள் உடல் ஆரோக்யத்தில் பெரும் கவனம் கொள்ள மாட்டார்கள். அவர்களிடத்தில் இயற்கை சாகுபடி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். விவசாயம் என்றால் கிராமம் என்ற நிலையை உடைக்க வேண்டும், குறைந்த இடத்தில் நல்ல மகசூல் தரும் இயற்கை விவசாயங்கள் பற்றி பல ஆய்வுகள் மேற்கொண்டு நாங்கள் செய்து வருவது தான் பிரபஞ்சம் என்ற மொட்டை மாடித் தோட்டம் செய்யும் முறை.

மொட்டைமாடித் தோட்டத்தை பொறுத்த வரை குறைந்த இடைவெளியில் விவசாயம் செய்வதே முக்கிய குறிக்கோள் ஆகும். இயற்கை விவசாயத்தை பொறுத்த வரை, விதையும் மண்ணும் நல்லமுறையில் இருந்தால் தரமான விவசாயத்தை செய்ய முடியும். சராசரி மொட்டைமாடியில் வீட்டு சமையலுக்கு தேவையான காய்கறிகளும், கீரை வகைகளும் நிச்சயம் சாகுபடி செய்ய இயலும். இதற்கு பெரிய முதலீடு தேவையில்லை,வீட்டில் உள்ள பழைய பூந்தொட்டிகள், பழைய காலி டப்பாக்கள், வாகன சக்கரங்கள் போன்ற பொருட்களை மறுசுழற்சி செய்தே நாம் பயன்படுத்திகொள்ளலாம். நாங்கள் நகர மக்களிடம் முதலில் இயற்கை காய்கறிகளின் அவசியத்தை விளக்குகிறோம். தகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம், குறைந்த இடவசதியில் விவசாயம் செய்யும் நுணுக்கங்களை சொல்லித்தருகிறோம். அதன் பின் அவர்களின் ஆர்வத்தாலே பல தரப்பட்ட செடிகளுடன் மாடித் தோட்டத்தை அமைத்து விடுகின்றனர்.நகர மக்களிடம் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது.
மாடித்தோட்டத்தை பொறுத்த வரை நம் சொந்த தேவைக்கு மட்டுமல்லாமல் ஆர்வமும் உழைப்பும் இருந்தால் நல்ல காய்கறி தொழிலாகவும் இதனை செய்யலாம், கிராமப்புறங்களில் மாதம் நல்ல வருமானம் தரும் நல்ல தொழிலாகவும் இதனை செய்யலாம். ஒருவேளை இயற்கை மாற்றத்தாலும், பூச்சுகளாலும் பாதிப்பு ஏற்படுமானாலும் அதற்கும் இயற்கை முறையில் சாணம் , தயிர், நெய், வேப்பிலைச்சாறு, நொச்சியிலைச்சாறு போன்ற இயற்கை பொருட்களால் செய்ய கூடிய பஞ்சகவியா என்ற மருந்து வகைகளும், உர வகைகளும் நாங்களே தயார் செய்கிறோம். கீரை வகைகளை சாகுபடி செய்வது மிக எளிது. குறைந்த காலத்தில் நல்ல மகசூல் பெறலாம். நகர்ப்புறங்களில் கீரை வகைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதிக அளவில் சாகுபடி தின வருமானம் செய்யும் தொழிலாகவும் இதனை செய்யலாம். இந்த சாகுபடிகளுக்கு தேவையான தரமான விதைகளையும் நாங்களே குறைந்த விலையில் அளிக்கிறோம், இதற்கான பயிற்சியை நாங்கள் இலவசமாக செய்து தருகிறோம். என்பது வீட்டின் பசுமைக்காகவும், தேவைக்காகவும் மட்டுமல்லாமல் நல்ல வருமானம் தரும் தொழிலாகவும் இதனை செய்து பயன்பெறலாம். இந்த தொழில் குறித்து மேலும் விவரங்கள் அறிய நாச்சாளை தொடர்பு கொள்ளலாம். தொடர்புக்கு : 9444529301.

SURABOOKS