SURABOOKS

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் குருப் ‘சி’ பணியிடம்

மேற்குவங்க மாநிலம், பானகாரில் உள்ள இந்திய ராணுவ வாகனங்கள் அலுவலகத்தில் காலியாக உள்ள குருப் ‘சி’ பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

1. மஸ்தூர்:

22 இடங்கள் (பொது – 12, எஸ்சி – 2, எஸ்டி – 1, ஒபிசி – 7). இதில் தலா 2 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

சம்பளம்:

ரூ.5,200 – 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,800.

தகுதி:

மெட்ரிகுலேசன் அல்லது அதற்கு சமமான தகுதி. நல்ல உடல் திறனுடன் இருக்க வேண்டும்.

2. பார்மசிஸ்ட்:

1 இடம் (பொது).

சம்பளம்:

ரூ.5,200 – 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,800.

தகுதி:

பிளஸ் 2 தேர்ச்சியுடன் பார்மசி பாடத்தில் 2 ஆண்டு டிப்ளமோ. கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

3. சிஎம்டி:

1 இடம் (பொது).

சம்பளம்:

ரூ.5,200 – 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900.

தகுதி:

சிவில் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மெட்ரிகுலேசன் படித்திருப்பது விரும்பத்தக்கது.

4. மெசஞ்சர்:

1 இடம் (பொது).

சம்பளம்:

ரூ.5,200 – 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,800.

தகுதி:

மெட்ரிகுலேசன் தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தகுதி.

5. சவேவாலா:

1 இடம் (ஒபிசி).

சம்பளம்:

ரூ.5,200 – 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,800.

தகுதி:

மெட்ரிகுலேசன் தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தகுதி.

வயது:

பொதுப்பிரிவினருக்கு 18 முதல் 25க்குள். ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி., எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.indianarmy.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

The Commandant,
Vehicle Depot Panagarh,
PIN: 900349.
C/O 99 APO.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.10.2014.

SURABOOKS