SURABOOKS

பட்டப்படிப்பு தகுதிக்கு முப்படைகளில் அதிகாரி ஆகலாம் – பயிற்சிக்கு பின் பணியில் சேரலாம்

இந்திய ராணுவ அகாடமி, இந்திய கப்பற்படை அகாடமி, இந்திய விமானப்படை அகாடமி மற்றும் ஆபீசர்ஸ் டிரெய்னிங் அகாடமி ஆகியவற்றில் சேர்ந்து பயிற்சி பெற்று பின்னர் அதிகாரி அந்தஸ்திலான பணிகளில் சேருவதற்கு ‘ஒருங்கிணைந்த பாதுகாப்புத் துறை தேர்வு’ என்ற தேர்வை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஆண்டுக்கு இரு முறை நடத்தி வருகிறது.

26.10.2014 அன்று நடத்தப்படும் யுபிஎஸ்சி தேர்வுக்கு பி.இ., அல்லது பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிட விவரம்:

அ. இந்திய மிலிட்டரி அகாடமி:

200 இடங்கள். இதில் 25 இடங்கள் என்சிசி – ‘சி’ சான்றிதழ் பெற்றவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதன் 139வது கோர்ஸ் டேராடூனில் 2015 ஜூலையில் தொடங்கும்.

வயது:

2.7.1991க்கு முன்பும், 1.7.1996க்கு பின்பும் பிறந்திருக்கக் கூடாது.

தகுதி:

ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு.

ஆ. இந்திய கடற்படை அகாடமி:

45 இடங்கள். இதில் 6 இடங்கள் என்சிசி – ‘சி’ சான்றிதழ் (கடற்படை பிரிவு) பெற்றவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரிவுக்கான பயிற்சி கேரளா, எழிமலாவில் 2015 ஜூலையில் தொடங்கும்.

வயது:

2.7.1991க்கு முன்பும், 1.7.1996க்கு பின்பும் பிறந்திருக்கக் கூடாது.

தகுதி:

பி.இ. பட்டம்.

இ. விமானப்படை அகாடமி:

32 இடங்கள். இந்தப் படையின் 198வது தி (றி ) பயிற்சி ஐதராபாத்தில் 2015 ஜூலையில் தொடங்கும்.

வயது:

2.7.1992க்கு முன்பும், 1.7.1996க்கு பின்பும் பிறந்திருக்கக் கூடாது.

தகுதி:

பட்டப்படிப்பு (பிளஸ் 2வில் இயற்பியல், கணிதம் படித்திருக்க வேண்டும்) அல்லது பி.இ. பட்டப்படிப்பு.

உ. ஆபீசர்ஸ் பயிற்சி அகாடமி – ஆண்கள்:

175 இடங்கள். இப்பிரிவுக்கான 102வது எஸ்எஸ்சி கோர்ஸ் (ஆண்கள்) சென்னையில் 2015 அக்டோபரில் தொடங்கும்.

வயது:

2.7.1990க்கு முன்பும், 1.7.1996க்கு பின்பும் பிறந்திருக்கக் கூடாது.

தகுதி:

பட்டப்படிப்பு.

ஊ. ஆபீசர்ஸ் பயிற்சி அகாடமி – பெண்கள்:

12 இடங்கள். இந்தப் பிரிவுக்கான 16வது எஸ்எஸ்சி பெண்கள் (டெக்னிக்கல் அல்லாதது) பயிற்சி சென்னையில் 2015 அக்டோபர் மாதம் தொடங்கும். பெண்கள் ஆபீசர்ஸ் டிரெய்னிங் அகாடமிக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பதால் அந்தப் பிரிவை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும்.

தகுதி:

பட்டப்படிப்பு.

விண்ணப்ப கட்டணம்:

ரூ.200. இதை பாரத ஸ்டேட் வங்கியின் ஏதேனும் ஒரு கிளையில் பணமாக செலுத்தலாம் அல்லது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஸ்டேட் பாங்க் ஆப் ப’க்கானீர் மற்றும் ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் ஆகிய வங்கிகளில் ஏதேனும் ஒன்றில் விசா/ மாஸ்டர் கிரெடிட்/ டெபிட் கார்டு பயன்படுத்தி நெட் பேங்கிங் மூலமும் செலுத்தலாம். பெண்கள், எஸ்சி., எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தமிழ்நாட்டில், சென்னை, மதுரை ஆகிய இடங்களில் எழுத்துத்தேர்வு நடைபெறும். ஆண்கள், பெண்களுக்கான உயரம், எடை பற்றிய விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

ஆண்கள் எஸ்எஸ்சி – ராணுவ பிரிவுக்கு மட்டுமே விண்ணப்பிப்பதாக இருந்தால் ஆபீசர்ஸ் டிரெய்னிங் அகாடமியை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும். எஸ்எஸ்சி (ஆபீசர்ஸ் டிரெய்னிங் அகாடமி) மற்றும் பெர்மனென்ட் கமிஷன் (ஐஎம்ஏ) ஆகிய இரு பிரிவுக்கும் விண்ணப்பிப்பதாக இருந்தால் ஆபீசர்ஸ் டிரெய்னிங் அகாடமியை இறுதி தெரிவாக குறிப்பிட வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.8.2014.

SURABOOKS