SURABOOKS

கல்லூரி பேராசிரியர், இளநிலை ஆராய்ச்சியாளருக்கான யுஜிசி ‘நெட்’ தகுதித் தேர்வு அறிவிப்பு

மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) மற்றும் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) ஆகியவை இணைந்து நடத்தும் ‘Junior Research Fellowship/ National Eligibility Test’க்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் இளநிலை ஆராய்ச்சியாளர் பணிக்கும், ‘நெட்’ தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கும் தேர்வு செய்யப்படுவார்கள்.

தகுதி தேர்வு:

JRF – NET 2014.

வயது வரம்பு:

1. ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப்: 28க்குள்.

நெட் தேர்வு:

உச்ச வயது வரம்பு நிலை கிடையாது. அதிகபட்ச வயது வரம்பு 1.7.2014 தேதிப்படி நிர்ணயிக்கப்படும்.

ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் பணிக்கு அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி., எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்களும், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்களும் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித்தகுதி:

ஏதாவது ஒரு பி.இ.,/ பி.டெக்.,/ பி.பார்ம் பட்டப்படிப்பு அல்லது பிஎஸ்எம்எஸ்/ எம்.எஸ்சி., எம்பிபிஎஸ் படிப்பு. பொது மற்றும் ஒபிசி பிரிவினர் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடனும், எஸ்சி., எஸ்டி., மாற்றுத்திறனாளிகள் 50 சதவீத மதிப்பெண்களுடனும் கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும். முதுநிலை படிப்பு இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

அகில இந்திய அளவில் நடைபெறும் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் மற்றும் நெட் 2014 எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் தேர்வு நடைபெறும். ஆப்ஜக்டிவ் டைப்பில் வினாக்கள் கேட்கப்படும்.

பாடத்திட்டம்:

Life Sciences/Earth/Atmospheric Ocean and Planetary Sciences, Mathematical Sciences, Chemical Sciences, Physical Sciences, Engineering Sciences ஆகிய பாடப்பிரிவுகளில் விண்ணப்பதாரரின் முக்கிய பாடப் பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். 3 மணி நேரம் நடைபெறும் தேர்வுக்கான பாடத்திட்டம் பற்றிய விவரம், தேர்வு நடைபெறும் முறை உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்ப கட்டணம்:

பொதுப்பிரிவினருக்கு ரூ.400. ஒபிசியினருக்கு ரூ.200. எஸ்சி., எஸ்டி., மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.100. இதை இந்தியன் வங்கி மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பதாரர்கள் www.csirhrdg.res.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

பிரின்ட் அவுட் அனுப்ப வேண்டிய முகவரி:

The Senior Controller of Examination,
Examination Unit, Human Resource Development Group,
CSIR Complex, (Opp.Institute of Hotel Management),
Library Avenue, Pusa,
NEWDELHI 110012.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.8.2014.

விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி நாள்: 12.8.2014.

எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 21.12.2014.

SURABOOKS