SURABOOKS

மத்திய அரசு துறைகளுக்கு 1997 டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் தேர்வு – பிளஸ் 2 படிப்பு போதும்

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1006 டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் மற்றும் 991 கிளார்க் பணியிடங்களுக்கு ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் நடத்தும் தேர்வுக்கு பிளஸ் 2 படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்:

1. டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்: 1006 இடங்கள்.

2. லோயர் டிவிசன் கிளார்க்:  991 இடங்கள்.

வயது:

1.8.2014 தேதியின்படி 18லிருந்து 27க்குள். (விண்ணப்பதாரர்கள் 2.8.1987க்கு முன்னர் மற்றும் 1.8.1996க்கு பின்னர் பிறந்தவர்களாக இருக்கக் கூடாது) வயது வரம்பில் எஸ்சி, எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டப்படியும் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித்தகுதி:

பிளஸ் 2 தேர்ச்சியுடன் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஒரு மணி நேரத்தில் கம்ப்யூட்டரில் 8 ஆயிரம் கீ அழுத்த வேகத்தில் பணி செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

லோயர் டிவிசன் கிளார்க் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கம்ப்யூட்டரில் நிமிடத்திற்கு 35 ஆங்கில வார்த்தைகளை டைப் செய்யும் திறன் இருக்க வேண்டும்.

டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், லோயர் டிவிசன் கிளார்க் ஆகிய 2 பணிகளில் எந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் என்பதை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் கம்ப்யூட்டர் திறன் தேர்வும், லோயர் டிவிசன் கிளார்க் பணிக்கு எழுத்துத்தேர்வு மற்றும் கம்ப்யூட்டரில் டைப்பிங் செய்யும் திறன் தேர்வும் நடத்தப்படும்.

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை ஆகிய மையங்களில் எழுத்துத்தேர்வு நடைபெறும்.

விண்ணப்ப கட்டணம்:

ரூ.100. இதை ‘ரெக்ருட்மென்ட் ஃபீ’ ஸ்டாம்ப் மூலம் அல்லது நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம். விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மற்றும் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.

www.ssconline.nic.in
என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

The Regional Director (SR),
Staff Selection Commission,
EVK Sampath Building,
2nd Floor, College Road,
CHENNAI 600006.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 19.8.2014

வங்கி மூலம் விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி நாள் : 21.8.2014

தபால் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் : 19.8.2014

எழுத்துத்தேர்வு நடைபெறும் நாட்கள் : 2.11.2014 மற்றும் 9.11.2014.

SURABOOKS