தொழில் முனைவோர்

தொழில் முனைவோர் – 7

நம் தாத்தா, பார்த்திருக்கிரீர்களா? வயதானலும், அவர்கள் எப்போதும் சுறுசுறுப்பாகவே இருப்பார்கள். சில நேரங்களில் படிக்கட்டு ஏறும்பொழுது நாம் மூச்சுவாங்கி நின்றாலும், நம்மை கடந்து ஒரு முதியவர் மேலே ஏறி செல்லும் அனுபவம் நம் வாழ்க்கையிலும் நடந்திருக்கும். அந்தக்கால ஆட்கள் சராசரியாக எண்பது வயது முதல் தொண்ணூறு வயது வரை வாழ்ந்திருப்பார்கள். நூறு வயதை தொட்டவர்களையும் நாம் பரவலாக பார்க்கம்.இப்போதைய நம் தலைமுறையினரின் சராசரி அறுபது வயது தான் என்கின்றனர் ஆய்வாளர்கள். இளம் வயதிலேயே பல தரப்பட்ட நோய்களுக்கு ஆளாகி அல்லல்படுகின்றனர் தற்போதைய இளசுகள். அதற்கான ...

Read More »

தொழில் முனைவோர் – 6

தற்பொழுது உள்ள காலகட்டத்தில் விலைவாசி ஏற்றம் விண்ணை எட்டித் தொட்டுவிடும் அளவிற்கு உள்ளது. நாளுக்குநாள் அன்றாடப்பொருட்களின் விலை ஏறுமுகமாகவே உள்ளது. கிராமப்புற மக்களே ஒவ்வொரு நாளையும் குறிப்பிட்ட பண மதிப்பீட்டில் சுருக்கி வாழத் தொடங்கிவிட்டனர். அப்படி என்றால் நகர வாசிகளின் நிலைமையை சொல்லவே வேண்டாம். காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை எல்லாமும் கிட்டதட்ட செலவு கணக்குக்குள் தான் வரும். நகர வாழ்க்கையில் நடுத்தர குடும்பத்தை கையைக் கடிக்காமல் ஓட்ட வேண்டும் என்றால், வீட்டில் இருவரும் வேலைக்கு சென்றால் தான் சரிப்பட்டு வரும் ...

Read More »

தொழில் முனைவோர் – 5

உலகம் வேகமாகி முன்னேறி வருகிறது. அனைத்து களங்களிலும் கால் பதித்து வருகிறான் மனிதன். இணையாக பெண்களும் உலக முன்னேற்றம் என்ற ஓட்டத்தில் ஓட தொடங்கிவிட்டார்கள். பெண்கள் என்றால் வீட்டுவேலைகளுக்கும், பேறுக்காகவும் என்ற காலம் கரையேறிவிட்டது. பாரதி கண்ட புதுமைப் பெண்களை நாம் காணத் தொடங்கி விட்டோம். ஆண்கள் களம் காணும் அனைத்து துறைகளிலும் பெண்கள் களம் இறங்கிவிட்டார்கள் என்பது பெருமைக்குரிய விஷயம்தான். சொந்தத் தொழில் தொடங்கிய தொழிலதிபர்கள் என்று நாம் கணக்கிட்டு பார்த்தால், ஆண்களை விட பெண்களின் சதவீதம் ரொம்ப குறைவுதான். அதற்குப் பல ...

Read More »

தொழில் முனைவோர் – 4

நன்றாக யோசித்து பார்த்தால் நாமும் ஒரு வகையில் ஆட்டு மந்தை தான். புதிதாக ஏதாவது திட்டங்கள் தோன்றினாலும், எதுக்கு ரிஸ்க், எல்லாரும் போற வழியிலேயே நாமும் போய் விடுவோம் என்பதுதான் நம்மில் பலரின் பொதுவான கருத்தாகும். இப்படித் தான் புதிதாகத் தோன்றும் எண்ணங்களை எல்லாம் நாம் ரிஸ்க் என்ற வார்த்தையால் கொன்று புதைத்து விடுகிறோம். இப்படி நம்மில் கூட்டத்தோடு கூட்டமாக எத்தனையோ தொழிலதிபர்கள் வாழ்ந்து கொண்டுதான் வருகிறார்கள். ரிஸ்க் எடுப்பது சரி என்றும் நாம் சொல்லிவிட முடியாது. ஆனால் எடுக்கப்படும் ரிஸ்க்கை நாம் கொஞ்சம் ...

Read More »

தொழில் முனைவோர் – 3

தொழில் துறையில் சாதிக்க வேண்டும் என்றால் கனரக இயந்திரங்கள், பல லட்சங்களில் முதலீடு என்றுதான் இருக்க வேண்டுமா என்றால், நிச்சயம் இல்லைதான். நம் அன்றாட வாழ்வில் கண்ணில் காண்பவை எல்லாமே ஏதோ ஒரு தொழில் துறையில், பெயர் அறியாத பலரின் உழைப்பால் உருவானவை தான். ஒரு தொழிலில் ஈடுபட்டு அதனை முறையாக கவனிக்க வேண்டும் என்றால் நாமும் அந்த தொழில் துறையை சார்ந்த இடத்தில் வசிப்பது தான் போக்குவரத்திற்கு எளிதாக இருக்கும். அப்படி இருக்க, நாங்கள் கிராமப்புறத்தில் வசித்து வருகிறோம், நாங்கள் என்ன மாதிரியான ...

Read More »

தொழில் முனைவோர் – 2

“பட்டப்படிப்பு படித்தவர்கள் தான் வாழ்வில் முன்னேற்றம் கண்டு வருகிறார்கள். இந்த சமூகமும் படித்தவர்களைத் தான் பெரிதும் மெச்சுகிறது. படிக்காத மக்களை இங்கு யாரும் கண்டுகொள்வதில்லை, படிக்காதவர்களுக்கு என சில வேலைகளை இந்த சமூகம் எழுதப்படாத சட்டமாக வகுத்தே வைத்து விட்டது. படித்தவர்களுக்கே இங்கு சலுகைகளும்,வாய்ப்புகளும் பெரிதும் கொட்டிக்கிடக்கின்றன. ஏதோ ஒரு குடும்பச் சூழ்நிலையால் நாங்கள் படிக்காமல் போய் விட்டோம், அதனால் இப்போது நாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம் என்றெல்லாம் நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தாலும், உங்கள் உறவினரோ, நண்பரோ பேசக் கேட்டாலும், அது மிகவும் தவறான கருத்து எண்ணம் ...

Read More »

தொழில் முனைவோர் – 1

அரசுப் பணி, தனியார் பணி என்று பல்வேறு வேலைவாய்ப்புகள் சந்தையில் கொட்டிக்கிடக்கின்றன. என்னதான் இருந்தாலும், தான் ஒரு முதலாளியாக இருந்து ஒரு தொழில் செய்து அதில் இருந்து கிடைக்கும் பணம் இருக்கிறதே. அந்தச் சுகமே தனிதான் என்று நினைப்பவர்களுக்கான பகுதி இது.  சொந்தமாகதொழில் தொடங்க வேண்டும் என்றுஆசை இருக்கிறது. தன்னம்பிக்கை இருக்கிறது, திட்டங்கள் இருக்கின்றன.  ஆனால், என்னை நம்பி யார் பணம் தருவார்கள்? முறைப்படி ஒரு தொழிலை எப்படித் தொடங்குவது? அதை எப்படி அங்கீகாரப்படுத்துவது? இப்படி நிறையக் குழப்பங்கள்தான் நம் கனவுக்கு முட்டுக்கட்டை போட்டு, ...

Read More »