சுயதொழில்

இல்லத்தரசிகள் வேலைவாய்ப்பு

வித்தியாசமான யோசனைகள், நடைமுறைப்படுத்துதலில் உள்ள புதுமை இவைகள் எல்லாம் வருமானத்திற்கு வழிவகுக்கும். கடந்த இதழில், இல்லத்தரசிகளுக்கு சொன்ன யோசனை பயனுள்ளதாக இருந்ததா? அந்த யோசனையை நடைமுறைப்படுத்த ஆரம்பித்துவிட்டீர்களா என்பதை தெரிந்துகொள்ள, எம்ப்ளாய்மெண்ட் மாஸ்டர்” இதழ் ஆர்வமாய் இருக்கிறது. நாங்கள் இங்கு தரும் யோசனைகள் உங்களை எந்தளவிற்கு சிந்திக்க வைத்திருக்கிறது என்பதையும் எங்களுக்கு எழுதுங்கள். இது முழுக்க முழுக்க இல்லத்தரசிகள் வீட்டிலிருந்தே வேலைசெய்யும் முறை என்பதால், ஏற்கனவே வீட்டில் கைத்தொழில் செய்து பெரிய அளவில் இல்லாவிட்டாலும், சிறிய அளவில் அதில் லாபம் ஈட்டும் இல்லத்தரசிகளும் இந்தப் ...

Read More »

சணல் கைவினைப் பொருட்கள் தயாரிக்க இலவச பயிற்சி: திருப்பூரில் 45 நாட்கள் நடக்கிறது

சணல் கைவினைப் பொருட்கள் தயாரித்தல் குறித்த இலவச தொழில்முனைவோர் பயிற்சி வகுப்பு திருப்பூர் நிஃப்ட்டீ கல்லூரியில் 45 நாட்களுக்கு நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து, திருப்பூர் நிஃப்ட்டீ கல்லூரி தலைவர் சி.எம்.என்.முருகானந்தன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சமீபகாலமாக புதிய வகையில் கைவினைப் பொருட்கள், ஆடை ரகங்களை உருவாக்கி மறுசுழற்சிக்கு உட்படுத்தக்கூடிய மலிவான விலையில் பொருட்கள் தயாரிப்பது பிரபலமாகி வருகிறது. சணல் போன்று உறுதியான, மலிவான இழைகளைக் கொண்டு புதிய வகையில் கைவினைப் பொருட்கள் தயாரித்து சந்தைப்படுத்தி லாபம் ஈட்டுவதும் பெருகி வருகிறது. பருத்தி இழைகளுக்கு அடுத்ததாக சணல் ...

Read More »

வாங்க தொழில் தொடங்கலாம்!

வார வாரம் இந்தப் பகுதியில் பல்வேறு தொழில் யோசனைகளையும் திட்டங்கள் வடிவமைப்பது பற்றியும் பார்த்து வருகிறோம். தொழில் தொடங்குவது என்பது சமார்த்தியம், புத்திசாலித்தனம், விழிப்புணர்வு, கொஞ்சம் மூலதனம், புதுமையாக யோசித்தல் போன்ற காரணிகள் இருக்கும்பட்சத்தில் எளிதாக வெற்றிபெற்றுவிடலாம். தொழிலில் வெற்றி பெறுவது என்பது கம்பசூத்திரம் இல்லை. சந்தையை தொடர்ந்து கண்காணித்து வாருங்கள். தேவையும் அதே நேரத்தில் புழக்கமும் உள்ள பொருட்களை முதன் முதலாக தேர்வு செய்யுங்கள். அதற்குப் பிறகு அந்தப் பொருளின் தன்மையைப் பற்றி முழுமையாக ஆராயுங்கள். தன்மை எனப்படுவது, அந்தப் பொருள் எவ்வளவு ...

Read More »

நம் கையே மூலதனம்:

நரேஷ்குமார், (சலூன் மற்றும் ஸ்பா) ஒரு காலத்தில் அரசு வேலை என்பது தான் பிரதானமாக இருந்தது.இளைஞர்கள் மத்தியிலும் அரசு வேலைக்கே முக்கியத்துவம் இருந்தது.அதற்கு பின் மென்பொருள் துறையில் ஆர்வத்தை காட்டினர்.பொறியியல் துறையில் ஒரு பெரும்பாலானோர் தங்கள் ஆர்வத்தை காட்டத்தொடங்கினர்.இப்படி தான் உலகத்தின் பார்வையும்,இளைஞர்களின் பார்வையும் மாறிக்கொண்டே இருக்கிறது.அது உலக பரிமாற்றங்களை அடிப்படையாய் கொண்டு மாறுபடுகிறது.அந்த வகையில் இந்த காலகட்டத்திற்கு மக்களும் ,இளைஞர்களும் அதிகம் ஆர்வம் கொண்டு இருப்பது தொழில் துறையில்”தான். சொந்தமாக தொழில் தொடங்குவதில் தான் இன்றைய இளைஞர்கள் ஆர்வமாக இருப்பதாக ஒரு கணக்கெடுப்பு ...

Read More »

விருதுநகர் மாவட்டத்தில் இளைஞர்கள் தொழில் தொடங்க 25% மானியத்தில் கடனுதவி

சமுதாயத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களிடையே வேலைவாய்ப்பினை உருவாக்கும் வகையில் படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு தொழில் செய்ய 25 சதவீத மானியத்தில் கடனுதவி வழங்கப்படுகிறது. இது குறித்து மாவட்ட தொழில் மைய மேலாளர் மருதப்பன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பொருளாதாரத்தில் பின்தங்கிய இளைஞர்கள் பயனடையும் வகையில் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் உற்பத்தி, சேவை தொழில் மற்றும் வியாபாரம் செய்வதற்கும் மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இதில், உற்பத்தி தொழில்களுக்கு அதிகபட்சம் ரூ.5 லட்சமும், சேவை தொழில்களுக்கு ...

Read More »